சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை. யாழ்ப்பாணம்: பிரதேச செயலகம், வலிகாமம் மேற்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (யாழ்ப்பாணம்: திருமொழி அச்சகம், சங்கானை).
(4), 14 பக்கம், அட்டவணை, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
தொழுநோய் சம்பந்தமாக பொதுமக்களுக்கும் நோய்க் கிருமி தொற்றியுள்ள நோயாளர்களுக்கும் தொழுநோய் பற்றிய அடிப்படைத் தகவல்களை வழங்குதல் சந்தேகங்களையும் தவறான கருத்துக்களையும் தெளிவுபடுத்தல், பயத்தையும் பதற்றத்தையும் போக்குதல், நோயினால் பீடிக்கப்பட்டவர்களை கருணையுடன் கையாள்வதற்கான சமூக சுற்றாடலை மேம்படுத்துதல் என்பன சுகாதாரத் துறையிலுள்ள ஊழியர்களின் மாபெரும் பொறுப்பாகவுள்ளது. இப்பொறுப்புகளை சீராக நடைமுறைப்படுத்துவதற்கு இந்நோய் பற்றிய சரியான தகவல்களை துறைசார் வல்லுநர்கள், எளிமையான உரைநடையில், சாதாரண மக்களும் புரிந்தகொள்ளக்கூடிய கலைச்சொற்களைப் பயன்படுத்தி சமூகமயப்படுத்த வேண்டியது அவசியம். இந்நூல் அத்தகையதொரு செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் காட்டுப்புலம், வறுத்தோலை ஆகிய கிராமங்கள் தொழுநோய்க்குரிய கிராமங்களாக சுகாதாரத் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட போதிலும், சுழிபுரம் மத்தி, சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் கிழக்கு, சங்கரத்தை, சித்தன்கேணி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இந்நூல் அப்பிரதேசத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53610).