World Vision Lanka. யாழ்ப்பாணம்: சங்கானைப் பிராந்திய அபிவிருத்தித் திட்டம், World Vision Lanka, சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
World Vision Lanka நிறுவனத்தினர் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதாரம் தொடர்பாக மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளில் ஒரு பகுதியாக பாடசாலை மாணவர்களின் தொற்றுநோய்கள் தொடர்பான அறிவினை அதிகரிப்பதற்காக தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்போம் என்ற இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ளடங்கிய தகவல்கள் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சு.மோகனகுமார், ஐ.மைக்கல் (Area Development Programme Manager), பீ.ஆதித்தன் (Area Development Programme Coordinator) ஆகியோரின் அர்ப்பணிப்புடன் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67698).