ஆ.ஜென்சன் றொனால்ட். கொடிகாமம்: கயல்விழி அறிவொளி முன்பள்ளி, கயல்விழி ஒழுங்கை, அறிவொளி வீதி, மீசாலை வடக்கு, 1வது பதிப்பு, மே 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
60 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-98956-1-4.
தொற்றா நோய்கள், தொற்றா நோய்களுக்கான பிரதான ஆபத்துக் காரணிகள், தொற்றா நோய்களால் ஏற்படும் சமூக பொருளாதார விளைவுகள், முற்கூட்டிய தடுப்பும் பாதுகாப்பும், தொற்றா நோய்களின் பிரதான வகைகள், இதய நோய்கள், புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், முன்நிற்கும் சுரப்பிப் புற்றுநோய், கருப்பைக் கழுத்துப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், குருதிப் புற்றுநோய், நீண்டகால சுவாசத் தொகுதிசார் நோய்கள், நீரிழிவு-சலரோகம், உயர் குருதி அமுக்கம், குருதியில் சமநிலையற்ற கொழுப்பு, சிறுநீரக நோய், ஆரோக்கியமான வாழ்க்கைப் பாணி, ஆரோக்கிய வாழ்விற்கு ஆகிய 21 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் ஒரு பொது சுகாதாரப் பரிசோதகராவார்.