ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம். கொழும்பு 4: ஐ.நா.சிறுவர் நிதியம், 231, காலி வீதி, இணை வெளியீடு, கொழும்பு: சுகாதாரக் கல்விப் பணியகம், சுகாதார மகளிர் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு: Aitken Spence Printing Ltd).
xiv, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
நோய் நொடியற்ற சிறுவர் சமுதாயமொன்றை உருவாக்கத் தேவையான அறிவை, சகல மக்கள் மத்தியிலும் பரப்பும் செயற்பாட்டில் உதவவென Facts for Life என்ற ஆங்கில நூலை UNICEF, உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான கலாச்சார ஸ்தாபனம் (UNESCO) என்பன இணைந்து வெளியிட்டிருந்தன. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் உபயோகிப்பதற்கேற்ப ‘உயிர்காக்கும் உண்மைகள்’ என்ற தலைப்பில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. முகவுரை, சிறுவர் சேமநலனில் ஆண்களின் பங்கு, பாதுகாப்பான தாய்மை, தாய்ப்பால் ஊட்டுதல், குழந்தையின் வளர்ச்சி, நோய்த்தடுப்பு, வயிற்றோட்டம், இருமலும் தடிமலும், சுகாதாரம், மலேரியாவும் நுளம்புகளால் பரவும் ஏனைய நோய்களும், வீட்டு விபத்துக்கள், கர்ப்பம் தரிக்கும் கால இடைவெளி, எயிட்ஸ் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66891).