17384 தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்.

பால சிவகடாட்சம். திருக்கோணமலை: வானவில் வெளியீடு, 1வது பதிப்பு, 2006. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).

280 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-1098-00-2.

‘தமிழர் மருத்துவத்தின் வரலாறு’ என்ற முதலாவது பகுதியில், உலக வரலாற்றில் மருத்துவம் (சரித்திரம் படைத்த மருத்துவர்கள், உலகம் அறிந்த முதலாவது மருத்துவர் இம் ஹோரெப் (கி. மு 2630) Imhotep, மேலைத்தேய மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்கிரட்டீஸ் (கி. மு. 460 – 377) Hippocrates, கிரேக்கத்தின் புகழ்பெற்ற இரு மருத்துவர்கள் ஹிரோபிலோஸ் (Herophilos) எராசிஸ்ரோஸ் (Erasistratos), ரோமாபுரிப் பேரறிஞர் கலென் (கி. பி 130 – 121) Galen, சீன நாடிவல்லுனர் வாங்-சூ-ஹோ (கி.பி.180-270) Wang Shu – Ho மருத்துவத்தின் இளவரசன் அவிசென்னா (கி. பி. 980-1037) Avicenna), இந்திய மருத்துவ வரலாறு (ஆயுள்வேதப் பிதாமகர் தன்வந்தரி (கி. மு 600) Dhanvanthrie புத்தரின் மருத்துவர் ஜீவககுமாரபச்சன் (கி. மு. 500) Jivaka Kumarabachchan ஆயுள்வேதப் போதனாசிரியர் ஆத்திரேயர் (கி.மு. 500 – 600) Atreya, ஆயுள்வேத நூலாசிரியர் சரகர் (கி. பி 100) Caraka ‘வாகடம்’ தந்த வாக்பட்டர் (கி. பி. 600) Vagbhatta, பௌத்தமும் மருத்துவமும், தமிழகத்தில் ஆயுள்வேதம் (வீரசோழன் ஆதுலசாலை (கி. பி 1063 – 1069), தமிழகத்தின் சித்தர் மரபுஇ தமிழில் மருத்துவ நூல்கள் (அகத்தியர் நூல்கள், தேரையர் நூல்கள்இ செகராச சேகரம் தமிழ் வாகடத் தொகுப்பு (கி. பி 1500), பரராச சேகரம் (கி. பி 16 ஆம் நூற்றாண்டு), தமிழர் மருத்துவத்தின் தனிச் சிறப்புக்கள் (நோய் நிதானம், அங்காதி பாதம், சர்ப்ப சாஸ்திரம், அட்டை விதி, இரச மருத்துகள் ஆகிய தலைப்புகளில் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘உணவே மருந்து’ என்ற இரண்டாவது பகுதியில் அளவறிந்து உண்க, கொலெஸ்ரெறோல், இருதய வியாதிகள், உயர் இரத்த அழுத்தம், மூட்டுவாதம் ஆகிய தலைப்புகளில் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியான  ‘வீட்டு வைத்தியம்’ என்ற பகுதியில், செமியாக்குணமும் வாய்வும், மலச்சிக்கல், மூலவியாதி , வயிற்றோட்டம், சீதபேதி குடற்புழுக்கள், நெஞ்செரிவு, வயிற்றுப்புண், குடல்புண், வாந்தி, விக்கல், நீரிழிவு, சலக்கடுப்பு, சிறுநீரகக் கற்கள், தடுமல், இருமல், காய்ச்சல்,தலைவலி, காதுவலி, பெரும்பாடு, சூதகவலி, வெள்ளைபடுதல், அலோஜி, ஆஸ்த்மா, மஞ்சட்காமாலை, காசம், எய்ட்ஸ், தைறோய்ட், கிரந்தி, பொடுகு, படர்தாமரை, எரிகாயம், கட்டு, புண், முகப்பரு, முகத்தில் சுருக்கங்கள், கூந்தலைப் பாதுகாக்கும்முறை, பூச்சிக்கடி, பல்வலி ஆகிய தலைப்புகளில் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நான்காவது பகுதியான ‘மூலிகை ஆய்வு’ என்ற பகுதியில் மூலிகை ஆய்வின் முன்னோடிகள், மருத்துவ நூல்கள் கூறும் மூலிகைகளை இனம்காணல், மூலிகை அட்டவணை ஆகிய தலைப்புகளில் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66447).

ஏனைய பதிவுகள்

På Big Bad Wolf slot Spillemaskiner

Content Slots Idræt Free Spins Unden Nemid Applikationer Bonusrunder, Wilds Og Autoplay Fortrinsvis Populære På Spiludbydere Pr. Bedste Danske Tilslutte Casinoer Free Spins Kasino Bonusser

Finest Online slots

Articles Directory of All of the Mobile Casinos on the internet To own Professionals – slot Sizzling Hot app Better Online slots games Designed for