17385 மட்டக்களப்புத் தமிழக பாரம்பரிய மருத்துவம்.

பொன். செல்வநாயகம். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

152 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-5913-04-6.

இந்நூலாசிரியர், கிழக்கின் பாரம்பரிய வைத்திய முறைகளும், கண்ணகி வழிபாடும் வழிவழியாக பேணப்பட்டு வந்த செட்டிபாளையத்தில் பிறந்து வளர்ந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கிழக்கு மாகாணப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது மட்டக்களப்பில் வாழும் நூலாசிரியர் தந்தை வழியில் ஒரு பாரம்பரிய வைத்தியக் குடும்பத்தின் தலைமுறை வழிவந்தவர். அந்த அனுபவத்தின் துணைகொண்டு இந்நூலை இவர் உருவாக்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்