நினைவுக்குழு. சாய்ந்தமருது: மர்ஹூம் அல்ஹாஜ் ஆதம்பாபா அப்துல் ரஹீம் நினைவுக்குழு, 360 C, அல் ஹிலால் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (aகொழும்பு 6: Printmax Arabic, Commercial and Academic Printers, 473, 2/2, காலி வீதி, வெள்ளவத்தை).
44 பக்கம், விளக்கப்படம், விலை: அன்பளிப்பு, அளவு: 18×12.5 சமீ.
மர்ஹூம் அல்ஹாஜ் ஆதம்பாபா அப்துல் ரஹீம் அவர்களின் ஞாபகார்த்தமாக 14.02.2008 இல் நடைபெந்ற்ற 40ஆம் நாள் கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவத்தின்போது அன்னாரின் குடும்பத்தினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நூலில் ஒளு என்னும் நீரியல் மருத்துவம், முகத்துக்கு அழகு சேர்க்கும் ஒளு, மன அமைதி கொடுக்கும் ஒளு, தண்ணீர் ஓர் உலகளாவிய கரைப்பான், தோல் மூளையின் ரிமோட் கன்ட்ரோல் ஸ்விச், ஒளு நம் தோலுக்கு பாதுகாப்பு, மூக்கை கழுவினால் மூளையை பாதுகாக்கலாம், ஹெர்பல் மிஸ்வாக் (ஆளைறயம) பிரஷ், மூலிகை மிஸ்வாக் சிறந்தது ஏன்?, ஒளு முகம் கழுவுதல் பயிற்சி, ஒளுவில் பிடரி மஸாஜ் பயிற்சி, ஒளுவில் தலை மஸாஜ் பயிற்சி, ஒளுவில் கை முழங்கை மஸாஜ் பயிற்சி, ஒளுவில் இரு கால் மஸாஜ் பயிற்சி, ஒளு தயம்மம்- இயற்கை மண் மருத்துவம், ஒளு தண்ணீர் அக்குபிரஷர் மஸாஜ், ஒளுவில் இயங்கும் அக்குபிரஷர் புள்ளிகள், ஒளுவில் கைக்கு மஸாஜ் பயிற்சி, ஒளுவில் கால்-பாத மஸாஜ் பயிற்சி, ஒளுவில் முகத்துக்கு மஸாஜ், ஒளுவில் தலைக்கு மஸாஜ் பயிற்சி, ஒளுவில் கழுத்து மஸாஜ் பயிற்சி, தொழுகை-ஒரு மனப் பயிற்சி, பிட்யூட்டரியை இயங்கவைக்கும் பஜ்ரு தொழுகை, காலை தொழுகையில் ஓசோன் புத்துணர்ச்சி, மன அமைதி உண்டாக வாசனை, தியானத்திற்கு சிறந்த ஆசனம், மன அமைதி உண்டாக தொழுகை, தொழுகையில் உடலுக்கு காந்த சக்தி, உள்ளத்தை கட்டி எழுப்பும் அழைப்பு- பாங்கு, தொழுகைக்கு பின் இறை தியானங்கள் (திக்ரு), திக்ரே கல்பி தியானம் ஓர் அறிவியல் உண்மை, தொழுகையில் ரிப்ளெக்சோலொஜி மருத்துவம், தொழுகையில் அக்குபிரஷர் சிகிச்சைகள், நபி நாயகம் திருவாக்கியத்தின் நஸீஹத்து நாமா ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 88753).