சிறில் எஸ்.சின்னையா. கொழும்பு 7: இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம், 28/10, லோங்டன் இடம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 11: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி, 217, ஒல்கொட் மாவத்தை).
X, 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
இந்நூலாசிரியர் சி.எஸ்.சின்னையா, முன்னர் ‘அரசாங்கத் திணைக்களங்களில் அலுவலக முறைமை’ என்ற நூலை எழுதி அதனை திறைசேரியின் ஒழுங்குறுத்தல் முறைசார் பகுதியினரால் 1947இல் வெளியிட்டிருந்தார். தற்போதைய அலுவலக முகாமைத்துவ நூலைத் தயாரிப்பதில், அரசாங்க சேவையில் பல வருடங்களாக எழுதுநர்கள், மேற்பார்வையாளர், முகாமையாளர் முதலிய பிரிவினரைப் பயிற்றிய அவரது அனுபவம் பிரதிபலிக்கின்றது. அலுவலக முறைமையின் அடிப்படை அம்சங்கள், பதிவேடுகள் முகாமைத்துவம், உள்வரும் தபால்களைப் பெற்றுத் திறத்தலும் கடிதத் தொடர்பினைக் கையாளுதலும், பத்திரங்களைப் பதிதல், இனங்காணல், இட அமைவு, சார் முறைமை, தேர்வு நிலைகள், பதிவேடுகளை அழித்தொழித்தல், கிளைகளின் தலைவர்கள், விடய எழுதுநர்கள், பதிவேட்டுக் காப்பாளர்கள், என்போரின் கடமைகள், பதிவேடு பேணுநர்களின் கடமைகள், மேற்பார்வையும் கட்டுப்பாடும், பதவியினரைப் பயிற்றுவித்தல், அலுவலகங்களில் வேலைச் செயலாற்றுகையை அளவிடுதல், நடைமுறைகளையும் கடிதத் தொடர்புகளையும் தரப்படுத்தல், காலத்தையும் உழைப்பையும் சேமிக்கும் உபாயங்கள்-நியம நடைமுறை, அலுவலகத் தளக்கோள அமைவு ஆகிய பெரும்பிரிவுகளின் கீழ் இந்நூல் விரிவான உபதலைப்புகளின் கீழ் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111795).