ந.திருஞானசம்பந்தர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: அரசாங்க எழுதுவினைஞர் சங்கம், 676, காலி வீதி, 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: ஈகிள் பிரிண்டிங் வேக்ஸ் லிமிட்டெட், 161, சிவன் பண்ணை வீதி).
vi, 180 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
இலங்கை அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் பாடநூல் வெளியீட்டுத் தொடரில் வெளிவரும் 5ஆவது பிரசுரம். இந்நூல் நான்கு பாகங்களாக வகுக்கப்பட்டுள்ளது. முதற்பாகத்தில் அறிமுகம், இலங்கைத்தீவின் நிருவாக வரலாறு, இலங்கையின் தற்போதைய நிருவாகம் ஆகிய அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் பாகத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள், அரசாங்க உத்தியோகத்தர்களது நியமனம், நிமனத்தையடுத்த நடவடிக்கைகள், நியமனத்தில் உறுதிப்படுத்தலும் வேதனாதிகளும், அலுவலர்கள் பற்றிப் பேணப்படும் கோவைகள், அவர்களது இடமாற்றங்கள், அரசாங்க அலுவலர்களுக்கான சில சலுகைகள், அரசாங்க அலுவலரது அரசியல் உரிமைகள், அவர்களது புத்தாக்கங்கள், அவர்கள் பெறும் வெகுமதிகள் என்பன, ஒழுக்காற்று நடவடிக்கைகள், தண்டனைகள், மேன்முறையீடுகள், அலுவலரது இளைப்பாறல்கள்-பதவியிலிருந்து விலகல்கள் ஆகிய அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. மூன்றாம் பாகத்தில் அலுவலகம், அலுவலக முறைமை, தபால், அரச அலுவலகங்களில் பேணப்படும் ஏடுகள், படிவங்கள், கோவைகள், சாதனங்களைப் பேணுதலும் அழித்தலும், பொதுமக்கள் தொடர்பு, அலுவலக முகாமை ஆகிய அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. நான்காம் பாகத்தில் சட்டங்களை வரைதல், சட்ட மதியுரைகள் ஆகிய அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பின்னிணைப்பில் தற்போது வழக்கிழந்துவிட்ட சில முக்கிய விடயங்கள், மாதிரி வினாப் பத்திரங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66839).