ஜேம்ஸ் றொபின்சன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, ரு U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2020. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
viii, 316 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-164-2.
இன்றைய போட்டிச் சூழலில் ஒரு நிறுவனம் நிலைத்திருக்கவும் வெற்றியடையவும் நிறுவன நடத்தைத் துறைசார்ந்த அறிவின் முக்கியத்துவம் பலராலும் உணரப்பட்டுள்ள இன்றைய நிலையில், இந்நூல் தமிழில் முகாமைத்துவ உயர்கல்வி மாணவர்களுக்கு உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவன நடத்தை: ஓர் அறிமுகம், வேலைப்படையின் பன்முகத் தன்மை, மனப்பாங்கும் வேலைத் திருப்தியும், ஆளுமை, புலக்காட்சி, நிறுவனங்களில் கற்றல், மன அழுத்த முகாமைத்துவம், நிறுவனங்களில் தலைமைத்துவம்: ஓர் அறிமுகம், மாற்றமடையும் சூழலில் தலைமைத்துவம், முரண்பாடு, முரண்பாட்டைக் கையாளும் பாங்குகள், நிறுவன கலாச்சாரம் ஆகிய பன்னிரு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி ஜேம்ஸ் றொபின்சன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ துறையில் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும் பார்க்க:
அரச போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைத் தாள்களின் தொகுப்பு. 17001