17396 அரச கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான கைநூல்.

ஆ.செல்லத்துரை (பதிப்பாசிரியர்), சு.குமரகுரு, செ.சுந்தரமூர்த்தி (உதவிப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: ஆசிய அபிவிருத்தி வங்கி, நிதி முகாமைத்துவ பயிற்சித் திட்டம், நிதி அமைச்சு, 1வது பதிப்பு, 1999. (திருக்கோணமலை: உதயன் பிரின்டர்ஸ், 39, அருணகிரி வீதி).

(4), 468 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15 சமீ.

இந்நூலில் பொது நிதி மீதான பாராளுமன்றத்தின் கட்டுப்பாடு (கா.வீரசிங்கம்), திறைசேரி அமைப்பும் தொழிற்பாடும் (எஸ்.ஹரிகரன்), அரசிறைக் கணக்கு (ச.க.சபாநாதன்), வரவு செலவுத் திடடம் தயாரித்தல் (திருமதி வள்ளி பிரபாகரன்), நிதி முகாமைத்துவம் (ஆ.செல்லத்துரை), நிதிக் கட்டுப்பாட்டுக்கான கடமைகளைக் கையளித்தல் (ச.க.சபாநாதன்), கட்டு நிதி (எஸ்.ஹரிகரன்), கணனி அறிமுகம் (எஸ்.ஹரிகரன்), அரச திணைக்களங்களில் பேணப்படும் பிரதான கணக்கீட்டுப் புத்தகங்கள் (ஆ.செல்லத்துரை), சம்பளங்களும் படிகளும் (ஆ.செல்லத்துரை), உள்நாட்டுப் பிரயாணப் படிக் கோரிக்கை (என்.இரவிச்சந்திரன்), கடமை லீவில் வெளிநாடு செல்லும்போது பிரயாணப்படி (ஆ.செல்லத்துரை), ஏனைய கொடுப்பனவுகள் (ஏ.மனோரஞ்சன்), முற்பணக் கணக்குகள் (ஆ.செல்லத்துரை), கொடுப்பனவு செய்யப்பட்ட உறுதிச் சீட்டுகளின் கட்டுக்கோப்பு (செல்வி ரீ.சுரேஜினி), கணக்கிணக்கம் செய்தலும் மாதாந்த கணக்குப் பொழிப்பு தயாரித்தலும் (ஆ.செல்லத்துரை), திறைசேரிப் புத்தகங்களுடன் கணக்குகளை இணக்கம் செய்தல் (ஆ.செல்லத்துரை), அரச கேள்வி நடைமுறை (அ.க.தெய்வேந்திரன்), இழப்புக்களும் பதிவழித்தல்களும் (அ.கெங்காதரம்பிள்ளை), வாகன ஓட்ட அட்டவணையும்அதை ஒழுங்காகப் பேணலும் (ஆ.செல்லத்துரை), ஒதுக்கீட்டுக் கணக்குகள் (த.பாலசுப்பிரமணியம்), ஓய்வூதிய நடைமுறை(ஆ.செல்லத்துரை, எஸ்.கயிலாயபிள்ளை), களஞ்சிய நடைமுறைகளும் மதிப்பீட்டுச் சபைகளும் (அ.கெங்காதரம்பிள்ளை), நிரந்தர சொத்துக்களின் முகாமை (கே.மயூரகிரிநாதன்), வைப்புக் கணக்குகள் (அ.க.தெய்வேந்திரன்), அரச திணைக்களங்களில் காணப்படும் குறைபாடுகள்  (எஸ்.ஹரிகரன்), வெளிநாட்டு உதவிகள் (எஸ்.ஹரிகரன்), முகாமைத்துவக் கட்டுப்பாடு (எம்.பரஞ்சோதி), அறிக்கை, கடிதம் எழுதுதல் (வி.தர்மலிங்கம்), பொதுமக்கள் தொடர்பு (செல்வி ரீ.சுரேஜினி) ஆகிய 30 விளக்கக்; கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66780).

ஏனைய பதிவுகள்

15249 கல்வி நிர்வாக முறைமைகள்.

ந.அனந்தராஜ். வல்வெட்டித்துறை: ஈ-குருவி டொட்.கொம்., தெணியம்மை, 1வது பதிப்பு, மே 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xi, 162 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 20×14 சமீ., ISBN: