17397 ஐரோப்பியக் கலை வரலாறு: க.பொ.த. உயர்தர சித்திரக் கலை- புதிய பாடத்திட்டத்திற்கு அமைவானது.

சக்திதேவி விமலசார. கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 3வது பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 2007, 2வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founder Street).

vi, 194 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

திருமதி சக்திதேவி விமலசார, கொழும்பு மாவட்டத் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளுக்கு சித்திரப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராக நீண்டகாலம் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். இந்நூலில் ஐரோப்பிய புராதன குகைச்சித்திரம், எகிப்திய நாகரிகத்தில் கலை ஆக்கங்கள், பபிலோனியா நாகரிகத்தில் கலை, கிரேக்க கலை, உரோமானியக் கலை, பைசாந்தியக் கலை, கோதிக் கலை, மறுமலர்ச்சிக் காலத்துக் கலை, மனப்பதிவு வாதத்தில் ஒளியியல் வாதம், பிற்பட்ட மனப்பதிவு வாதத்தில் நிழலியல் வாதம், கனவடிவ வாதம், அரூபவாதம், அகவய யதார்த்தவாதம், ஹென்றி ஸ்பென்ஸர் மூர் – சிற்பங்கள், ஒகஸ்தே றொடின்- சிற்பங்கள் ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71805).

ஏனைய பதிவுகள்