வடிவேல் இன்பமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2024, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xx, 246 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-669-4.
இந்நூல் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கான பாடநூலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் இன்றைய கலைத்திட்டங்களைச் சார்ந்த அணுகுமுறையில் நோக்கங்கள் (Objective), கற்றல் பேறு (Learning Income) ஆகியவற்றை மனங்கொண்டு எழுதப்பட்டிருப்பது இந்நூலின் தனித்துவமான அமைப்பாக அமைகின்றது. இந்நூலில் ஆரம்பகாலக் கட்டடக்கலை, பௌத்த கட்டடக்கலை, இந்துக் கட்டடக்கலை, கட்டடக்கலையில் திராவிட பாணி, இந்துக் கட்டடக்கலையில் நாகர, வேசர பாணி, இஸ்லாமியக் கட்டடக்கலை, கேரள, சமண, மற்றும் சீக்கிய கோயில்கள், மதச்சார்பற்ற கட்டடக்கலை, காலனித்துவக் கட்டடக்கலை, காலனித்துவ ஆட்சிக்குப் பின்னரான கட்டடக்கலை ஆகிய 10 அத்தியாயங்களின் வழியாக இந்தியக் கட்டிடக்கலை பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கலாநிதி வடிவேல் இன்பமோகன் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.