பாகீரதி கணேசதுரை. தெல்லிப்பழை: சிவபூமி வெளியீடு, சிவபூமி அறக்கட்டளை, ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2023. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xiii, 108 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-93290-0-3.
மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் திருமதி பாகீரதி கணேசதுரை, துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் கடந்த பத்தாண்டுகளாக கௌரவ உளவள ஆலோசகராகப் பணியாற்றி வருபவர். தான் அவ்வப்போது போட்டிகளுக்காகப் படைத்த வில்லிசைக்குரிய பத்து எழுத்துப் பிரதிகளை இத்தொகுப்பில் வழங்கியுள்ளார். பத்து வில்லிசைகளும் வெவ்வேறு களங்களைச் சார்ந்தவையாகவும் இன்றைய இளையோரை வழிப்படுத்துவனவாகவும் ஆழ்ந்தகன்ற சமூகப் பிரக்ஞைபூர்வமானவையாகவும் அமைந்துள்ளன. மககளுக்கு வழங்கவேண்டிய செய்திகளை வில்லிசை என்னும் கிராமியக்கலை மூலமாக ஜனரஞ்சக பாணியில் மண்வாசனையோடு இவை படைக்கப்பட்டுள்ளன. சிறுவர் உரிமை, இனி ஒரு விதி செய்வோம், கோபுர தரிசனம், தங்கத் தாய் மடியில், பூக்குழி புகுந்த பூவை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பாஞ்ச சன்ய நாதம், நில்லு கண்ணப்ப, குருதட்சணை, இரத்தம் சிவக்கட்டும் ஆகிய தலைப்புகளில் இப்பிரதிகள் எழுதப்பட்டுள்ளன.