17404 தமிழ் இசையியல்: தமிழிசைச் சிறப்பு மலர் -2025. 

தெட்சணாமூர்த்தி மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2025. (அச்சக விபரம் தரப்படவில்லை).

140 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600.00, அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-624-6036-04-1.

இச்சிறப்பு மலரில் சபா.ஜெயராசா (இனச் சால்பு இசையியல் அடையாள வலியுறுத்தலும் விரிந்த மானுட நோக்கமும்), சண்.பத்மநேசன் (இசைக்குழும இசையியல்-ஓர் அறிமுகம்), இ.அங்கயற்கண்ணி (சிலப்பதிகாரத்தில் தமிழிசை), நா.மம்மது (சிலப்பதிகாரத்தில் பண் -இராகம்- பதிவுகள்: சிறப்புக் கூறுகள்), ம.ஆயிசா மில்லத், கா.மாலிக் அலி (சிலப்பதிகாரம் இலக்கியமா? வரலாற்று ஆவணக் காப்பகமா?), செ.அ.வீரபாண்டியன் (சுரத்தின் இலக்கணம்), த.கனகசபை (குறல் சட்சம்: குரலே சட்சம்), கி.பார்த்திபராஜா (பாட்டும் கூத்தும்: இசை நாடக மரபு), பக்கிரிசாமி பாரதி (மரபிசைச் சுரங்கம்), சி.மௌனகுரு (தாள சமுத்திரம்: விமர்சனம் இடையிட்ட ஓர் அறிமுகம்), ம.ஆயிசா மில்லத், மா.சஃபியா பானு (காலைத் தென்றல் பாடிவரும்: காலப் பண்கள்), சுகன்யா அரவிந்தன் (ஈழத்து இசை மரபின் வேர்களை இனங்காணுதல்), தவநாதன் றொபேர்ட் (தனித்துவம் பெற்றுவரும் ஈழத்தின் தமிழிசை), பிரியதர்ஷினி ஜெகதீஸ்வரன் (தமிழிசையியல் நோக்கில் கிழக்கிலங்கை வழிபாட்டுச் சடங்குகளில் பாடப்படும் காவியங்கள்), கிருபாசக்தி கருணா (யாழ்ப்பாணத்துத் தமிழ் மன்னன் செகராசசேகரன் கால இசைமரபு), தெட்சணாமூர்த்தி மதுசூதனன் (இசையும் சமூகமும்) ஆகியோர் வழங்கிய 16 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்