17408 தமிழக ஆடல் வரலாறு.

கார்த்திகா கணேசர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, (2), 98 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-54-6.

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் கடந்த 50 தசாப்த கால நாட்டிய அனுபவம் வாய்ந்தவர். இவரது முதல் குரு யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயராவார். பின்னர் வழுவூர் இராமையா பிள்ளையிடம் குருகுல முறையில் பரதம் பயின்றவர். 1982இல் இலங்கை இந்து கலாசார அமைச்சு ‘நாட்டிய கலாநிதி’ எனும் விருதினை இவருக்கு வழங்கியிருந்தது. தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.  தமிழகத்தின் ஆடற்கலை வரலாறு கூறும் இந்நூல் இந்திய ஆடற்கலை வரலாறு, தமிழகத்தில் ஆடற்கலை வரலாறு, சிலப்பதிகாரம், அறநெறிக் காலம், பக்தி இயக்க காலம், நடராஜர் தாண்டவமும் தத்துவார்த்த பின்னணியும், இயக்கத்தின் சொரூபமே நடராஜமூர்த்தி, நாட்டிய சாஸ்திரம்: கி.பி. 2ம் நூற்றாண்டு-கி.பி.5ம் நூற்றாண்டு வரை, தமிழ் அகத்தியரது நாட்டிய நூலே வடமொழி நாட்டிய சாஸ்திரத்தின் மூலம், தமிழில் இருந்த நாட்டிய இலக்கண நூல்கள் எவ்வாறு அழிந்தன?, பஞ்ச மரபு எனும் தமிழ் நாடக நூல் ஆகிய பதினொரு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71464).

ஏனைய பதிவுகள்

Handy Casino Bonus Qua & Ohne Einzahlung

Content Inside Welchen Online Spielsaal Zum besten geben Darf Man Einen Prämie Vorteil? Willkommensbonus Goldene Tipps and Tricks Für Diesseitigen Casino Maklercourtage Bloß Einzahlung Wird