சு.சந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxxii, 237 பக்கம், விலை: ரூபா 2950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-42-3.
ஆற்றுகைகளை உயிரோட்டம் மிக்க உடல்மைய அறிவாகக் காண்பதற்கு இந்நூலில் சில வடிவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. புழக்கத்தில் உள்ள முறையியல் மூலம் இசைக்கூறுகள், நடன அசைவுகள் ஆகியவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாட்டார் வடிவங்களான சடங்குகள் கூத்துகள் உழைப்புசார் பாடல்கள் முதல் சைவ மரபு நிலைபெற்ற காலத்துத் தல புராணங்கள் வரை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவை இலங்கையின் கிழக்குப் பகுதி சார்ந்த தனித்த பதிவாகவும் அமைகின்றன. மட்டக்களப்பு வழிபாட்டுச் சடங்குப் பாடல்களின் ஆற்றுகை, மட்டக்களப்புத் தமிழ் இசை ஆற்றுகைகள், வசந்தன் கூத்து ஆற்றுகை மரபும் பால்நிலை சமத்துவமும், ஆற்றுகை மையக் கற்றலினூடாகக் கூத்தரங்கைப் புரிந்துகொள்ளலும் வலுப்படுத்தலும், கோணேசர் தலபுராணப் பாக்கள்: உருப்படி உருவாக்குதலும் அதன் ஆற்றுகையும் ஆகிய ஐந்து கட்டுரைகள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் சுந்தரலிங்கம் சந்திரகுமார், நாடகமும் அரங்கியலும் துறையில் சிறப்புக் கலைமாணி, முதுகலைமாணி, முதுதத்துவமாணி பட்டங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71496).