17414 இலங்கையின் சமகாலத் தமிழ் அரசியல் அரங்கு.

செ.இளங்கோ (இயற்பெயர்: செ.செல்வகுமார்). யாழ்ப்பாணம்: செ.செல்வகுமார், ஆசிரியர், யாழ்/விக்ரோரியா கல்லூரி, சுழிபுரம், 2வது பதிப்பு, பெப்ரவரி 2021, 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

x, 46 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-97417-0-6.

இந்நூல் இலங்கைத் தமிழரங்கில் சமகால அரசியல் அரங்கு பற்றிப் பேசுகின்றது. தேசிய கல்வி நிறுவகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய செ.செல்வகுமார், நாடக அரங்கப் பாடத்துறையில் ஆசிரியர்களுக்கான பயிலரங்குகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றவர். வழிமொழிதல், பாயிரம் ஆகிய ஆரம்பப் பக்கங்களைத் தொடர்ந்து, இலங்கையின் சமகாலத் தமிழ் அரசியல் அரங்கு-பின்னணி, படச்சட்ட அரங்கை மையப்படுத்திய அரசியல் அரங்கு, தெருவெளி அரங்க முறைமை, சமூகக் குழும அரங்கு, ஊர்வல அரங்கு, பட்டறை அரங்கு, படிம அரங்கு, பேரரங்கு, மைதான அரங்கு, சமகால அரசியல் அரங்கில் நெறியாள்கை, 2009 இற்குப் பின்னான அரங்கச் செல்நெறியில் தமிழ் அரசியல் அரங்கின் வகிபாகம் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்