சு.சந்திரகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxvi, 145 பக்கம், விலை: ரூபா 1450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-41-6.
யதார்த்த நாடகப் பனுவலைப் பகுப்பாய்வு செய்யும் பொழுது வெளிப்படும் பிரதியின் பன்முக அர்த்தங்கள், அதற்குள் இருக்கும் கோட்பாட்டு எண்ணக்கருக்கள், அதன் சமகாலச் சமூக அரசியல் பிரதிபலிப்புகள் முதலியன இந்நூலில் விவாதிக்கப் பெறுகின்றன. அத்துடன், பனுவலில் உள்ள அரங்கியல்சார் நாடகக் கட்டமைப்புகள், பாத்திர வார்ப்புகள், சூழமைவுகள் ஆகியனவும் அதன் கருத்தியல் வெளிநின்று ஆராயப்பட்டுள்ளன. ஐரோப்பிய, இந்திய, இலங்கை நாடகப் பனுவல்களில் தெரிவு செய்யப்பட்டவை இங்கு வியாக்கியானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவை எழுதப்பட்ட காலச் சூழலின் சமூக பண்பாட்டு அரசியல் நடைமுறைகள் பற்றிப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இந்நூல் கிழக்குப் பல்கலைக்கழக ‘நாடகமும் அரங்கியலும்’ கலைத்திட்டத்திலுள்ள ’யதார்த்த அரங்கில் நாடகவியல் இலக்கியமும் அரங்கத் தயாரிப்பும்’ எனும் பாடத்தின் அணுகுமுறையுடன் அதன் நோக்கம், பயன்விளைவு, எதிர்பார்க்கக் கூடிய கற்றல் பேறு முதலியவற்றைக் கொண்டு அமைவது தனித்துவமானது. இதனால் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான பாடநூலாகவும் ஆராய்ச்சியாளர்களின் பிரதி வாசிப்பு முறையியலுக்கான மாதிரியாகவும் இந்நூல் காணப்பெறுகின்றது. நூலாசிரியர் சுந்தரலிங்கம் சந்திரகுமார் ‘நாடகமும் அரங்கியலும்’ துறையில் சிறப்புக் கலைமாணி, முதுகலைமாணி, முதுதத்துவமாணி ஆகிய பட்டங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71469).
மேலும் பார்க்க:
பாலேந்திரா நேர்காணல்கள். 17861