லெ.முருகபூபதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-95-6.
இந்நூலில் அவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்துப் படைப்பாளி லெ.முருகபூபதி எழுதி அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்த சினிமா சார்ந்த 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும், பாதி உண்மையாகிப்போன ஓம்புரி, தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும், கவிதையும் திரைப்படப் பாடல்களும், முள்ளும் மலரும் மகேந்திரன் (1939-2019), மனோரமா ஆச்சி (1937-2015), இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ், இலக்கியத்தினூடே பயணித்த பாலு மகேந்திரா, சிலையாகும் சரித்திரங்கள், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் (1919-2018), தர்மசேன பத்திராஜ (1943-2018), ஈழத்து கலைஞர்களின் பொன்மணி, சினிமாவில் சாயலும்-தழுவலும்-திருட்டும்-எதிர்வினைகளும், பேசாப் பொருளை பேசத்துணிந்த President Super Star திரைப்படம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. ஜீவநதியின் 274ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.