சூரன் ஏ.ரவிவர்மா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
84 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-97-9.
ரசிகையின் கடிதத்தை விளம்பரமாக்கிய ஏ.வீ.எம்., நடிகர்களை உருவாக்கிய புகைப்படக் கலைஞர், இலட்சிய நடிகருடன் ஜோடி சேர மறுத்த பானுமதி, தற்கொலை செய்ய முயன்ற சந்திரபாபு, லதாவைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., கண்ணகியாக வாழ்ந்துகொண்டிருக்கும் விஜயகுமாரி, அவமானங்களை துடைத்து எறிந்து வெற்றிபெற்ற விஜயகுமார், கவிஞர் முத்துலிங்கத்துக்காக வாதாடிய எம்.ஜி.ஆர்., ஏ.வீ.எம். படத் தலைப்புகளில் வாழும் நடிகர்கள், தோல்விப் படத்தை வெற்றிப்படமாக்கிய ஏ.வீ.எம்., கலைஞர்களை இணைத்த சினிமா, தந்தைக்கு உதவி செய்த செல்வராகவன், கலைஞர் வழங்கிய காலத்தால் அழியாத பட்டங்கள், எம்.ஜி.ஆர். கேட்ட முற்பணம்-கடன் வாங்கிய பீ.ஆர்.பந்துலு, சின்னத்திரையை சீரழிக்கும் தற்கொலைகள், தமிழில் வெளியான தமிழ்ப் படங்கள், திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள், திரையில் தோன்றிய ஜோடிகள் ஆகிய 18 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த திரைப்படத்துறைசார் நிகழ்வுகளை தற்காலத்தோடும், கடந்த தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும் அவற்றின் மெய்த் தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 380ஆவது நூலாக வெளிவந்துள்ளது.