எஸ்.எதிர்மன்னசிங்கம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
x, 21 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.
நூலாசிரியர் பாடலும் ஆடலும் கலந்த பாரம்பரிய சிறுவர் விளையாட்டுக்களில் இருபது விளையாட்டுகளை இனங்கண்டு அவை பற்றி விளக்கியிருக்கிறார். இவ் விளையாட்டுக்களால் சிறுவர்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஒழுக்க மேம்பாட்டிற்கும் ஏற்படுகின்ற பயன்களும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சாஞ்சாடம்மா சாஞ்சாடு, ஆலாப் பறபற ஆலமுட்ட பற பற, ஆனையாடுமாம் பிள்ளை ஆனையாடுமாம், கிள்ளிக் கிள்ளி புறாண்டி, சப்பாணமாம் தம்பி சப்பாணம், கைவீசம்மா கைவீசு, கீரை கடையுறம் கீரை கடையுறம், கண்ணம் பொத்தி (கீச்சு மாச்சுத் தம்பலம்), பாட்டன் குத்து பறையன் குத்து, பொத்திப் பொத்திப் பிடி அந்தோனி, கிட்டிப்புள் விளையாட்டு, பல்லாங்குழி (பாண்டி), தும்பி விளையாட்டு, சுரக்காய் இழுத்தல், ஆடு புலி ஆட்டம், தெப்ப விளையாட்டு, பிள்ளையார் கட்டை விளையாட்டு, சில்லுக்கோடு விளையாட்டு, ஊஞ்சல் பாட்டு, பசுவும் புலியும் விளையாட்டு ஆகிய சிறுவர் விளையாட்டுகள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. இந்நூல் மகுடம் வெளியீட்டகத்தின் எட்டாவது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 100645).