17423 துடுப்பாட்டம் அன்றும் இன்றும்.

தில்லைநாதன் கோபிநாத்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

160 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-28-3.

துடுப்பாட்டம் இங்கிலாந்தில் 16ஆம் நூற்றாண்டளவில் உருவாகி 18ஆம் நூற்றாண்டில் அந்நாட்டின் தேசிய விளையாட்டாகியது. பிரித்தானிய குடியேற்ற காலத்தில் குடியேற்ற நாடுகளில் அறிமுகமானது. இப்போது துடுப்பாட்டம் இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென்னாசிய நாடகளில் மிகப் பிரபலமானதாக உள்ளது. இந்நூல் துடுப்பாட்டத்தின் ஆரம்பகாலம் முதல் 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான வரலாற்றைப் பதிவுசெய்கின்றது. இந்த நூலின் ஆசிரியர் தில்லைநாதன் கோபிநாத் ஈழத்து ஆவணமாக்கற் செயற்பாடுகளில் 2004 முதல் ஈடுபட்டுவருபவர். நூலக நிறுவனத்தில் 2005இல் அதன் ஆரம்பகாலம் முதல் பங்களித்து வருபவர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். தனது 16ஆவது வயதில் உதயன் தினசரியின் வார இதழில் (சஞ்சீவி) 30.01.1999 முதல் 24 இதழ்களில் தொடராக எழுதிவந்த சர்வதேச துடுப்பாட்டம் பற்றிய கட்டுரையின் நூல் வடிவம் இது. துடுப்பாட்டத்தின் (cricket) தோற்றம், முதல் டெஸ்ட் போட்டி, துடுப்பாட்டச் சாதனையாளர்கள், இலங்கையில் துடுப்பாட்ட வரலாறு, ஒரு நாள் போட்டிகளின் தொடக்கம், ஒரு நாள் சாதனைகள், உலகக் கிண்ணப் போட்டிகளின் வரலாறு, 1999 உலகக் கிண்ணப்போட்டி போன்ற விடயங்களை இத்தொடர் உள்ளடக்கியிருந்தது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 140ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). xviii,