17425 அம்மாவுக்குப் பிடித்த கனி.

ஷெல்லிதாசன் (இயற்பெயர்: பேரம்பலம் கனகரத்தினம்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2021. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரேடர்ஸ், 82, திருஞானசம்பந்தர் வீதி).

124 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-6135-07-2.

இடதுசாரி சிந்தனை ஆளுமைகொண்ட முற்போக்குக் கவிஞர் குழுவில் ஒருவரும், ஈழத்து மெல்லிசைப் பாடலாசிரியர்களுள் ஒருவருமான ஷெல்லிதாசனின் சிறுவர்களுக்கான பாடல்களின் தொகுப்பு இது. கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் வெளியீடான ‘கன்னி’, ‘வணிகமலர்’ ஆகிய இதழ்களின் ஆசிரியராக அறிமுகமாகியவர்.  இந்நூலில் மக்கள் கவி பாரதி, தெய்வம் எங்கள் பாட்டியம்மா, அம்மாவுக்குப் பிடித்த கனி, காற்றில் ஆடும் ரோஜாப்பூ, மாமரத்துக் குயில் பாட்டு, வான் நோக்கி வளரட்டும் வடலிகள், ஒற்றுமைக்கு ஒரு பறவை, நாளை உலகம் நமதாகும் என இன்னோரன்ன 42 இளையோருக்கான பாடல்களை கவிஞர் ஷெல்லிதாசன் வழங்கியுள்ளார். மேலதிகமாக ‘கதை கூறும் இசைப்பாடல்கள்’ என்ற பிரிவில் இசையோடு கலந்த பாடல்களுடனான சிறுவர் கதைகள் இரண்டினையும் ‘குட்டித்தம்பி கோமகனும் குதூகலமான நண்பர்களும்’, ‘அம்மா யானையும் இரு யானைக்குட்டிகளும்’ ஆகிய தலைப்புகளில் இடம்பெறச் செய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

14635 பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா?.

மீரா குகன். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 88 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

Fairytale Maiden NetEnt Slot Comment

Posts Gday slot no deposit – Better a real income gambling enterprises Play better slot game having incentives: Bonus Concerning the Want to Master On