கவிஞர் அம்பி (இயற்பெயர்: இ.அம்பிகைபாகன்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (கொழும்பு 13: ரெயின்போ அச்சகம், 231 ஆதிருப்பள்ளித் தெரு).
(8), 28 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 28.5×22 சமீ.
தமிழ் வளர்ச்சிக்காகப் பணிபுரியும் கொழும்புத் தமழ்ச் சங்கத்தின் பல்துறைப் பணிகளுள் நூற பதிப்புப் பணியும் ஒன்றாகும். பயனுள்ள பல நூல்களை இச்சங்கம் வெளியிட்டு வருகின்றது. இச்சங்கத்தின் ஐம்பதாவது ஆண்ட நிறைவில் இந்நூல் வெளிவருகின்றது. சிறுவர் இலக்கியத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கியுள்ள கவிஞர் அம்பியின் ‘கொஞ்சும் தமிழ்’ உலகெங்கும் வாழும் தமிழ்ச் சிறார்களைக் குதூகலத்தில் ஆழ்த்துவன. வண்ணப் படங்களுடன் நேர்த்தியான அச்சுப் பதிவைக் கொண்டு வெளிவந்துள்ள நூல் இது. அவரது நூற்றுக்கணக்கான பாடல்களிலே தேர்ந்தெடுக்கப்பட்ட 26 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அழைப்பு, கொஞ்சும் தமிழ், செய்தி என்ன?, வீமா, விண்ணில் மணி, சிட்டு, பட்டம், பம்பரம், மாரி, வேணி, மாம்பழம், நெல்லும் புல்லும், வீரம்மா, வண்ணப்பூச்சி, நாளை செய்வது என்ன?, அவர் யார்?, ஒளித்தது யார்?, மான் பிடிப்போமா?, வண்டிகள், ஏலேலோ, நாளை வருவேன், எனக்குச் சொல்லும், பாடம் பயில்வோம், நிலவைப் பிடித்த மந்திகள், மாலை வாங்குங்க, கடற்கரையிலே ஆகிய தலைப்புகளில் இப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.