17427 கொரோனாவின் தடங்களில்.

பத்மா இளங்கோவன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (கொழும்பு 6: குமரன் அச்சகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 70 பக்கம், விலை: ரூபா 775., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-6098-06-3.

சிறுவர் இலக்கியத்துறையில் தொடர்ந்து ஆர்வத்துடன் இயங்கிவரும் பத்மா இளங்கோவனின் கவிதைத் தொகுதி இதுவாகும். கல்லூரிக் காலம் முதல் இலக்கிய வாஞ்சைடன் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருபவர் இவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் பாடல்கள் எனப் பலவற்றைப் படைத்துள்ள இவர் சிறுவர் இலக்கியத்துக்கான சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையினரின் விருதினை தமிழகத்தில் 2012இல் பெற்றுக்கொண்டவர். இந்நூலில் சில கவிதைகளின் வாயிலாக கொரோனா குறித்த விழிப்புணர்வை சுதேச மருத்துவச் சிந்தனையினூடாக இளையோருக்குச் சொல்ல விழைகின்றார். மேலும் பல்வேறு விடயங்களைப் பேசுகின்ற கொரோனாவின் தடங்களில், சித்தம் கலங்காதே சிந்திப்பாய் மனிதா, சித்தர் வாக்கு, எங்களைவிட்டே ஓடிவிடு, உனக்காய் என்ன செய்தோம்?, யாதும் ஊரே யாவரும் கேளிர், முதுமை ஒரு கொடையோ?, முதுமை காணும் இனிமை, கண்டேன் கண்ணனை, அனலைக் கீதம், அலைகடல் தாலாட்டும் அனலை, அப்பா நினைவு, தாய்த் திருநாள், தாலாட்ட வருவாயா?, நல்லாட்சி மலரட்டும், கொரொனாவில் பொங்கல் திருநாள், எங்கள் ஊர் பூவரசே, தாய் நாட்டுச் சுகம், எதனால்?, எல்லாம் அழகு, அகதி வாழ்வின் நிலை?, அழகே தான், ஏன் கூண்டில் அடைக்கிறார், வேண்டும் எந்தன் நாட்டுப் பூபாளம், நம்ம நாட்டுக் காக்கா நல்ல சேதி தாக்கா, எம் மண்ணைக் காத்து நிற்கும் பனைமரம், முற்றத்தில் செங்கரும்பு, எந்த நிறமும் ஏற்றம் தான், பழகு கணினி, சிறுவர் மனங்களை வென்ற செந்தமிழறிஞர் த.தரைசிங்கம் ஆகிய 30 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்