17428 சாதனா ஆடுறா.

யானைத் தாத்தா தேவன் பூதனார் (இயற்பெயர்: சோ.தேவராஜா). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, ஆடி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 15×21 சமீ., ISBN: 978-955-0958-07-8.

‘தாயின் மடியில் தவழ்ந்து பூமித் தாயின் மடியில் நடைபயின்று, மழலைத் தமிழில் மகிழ்ந்து ஆடுவதும் பாடுவதும் கூடி மகிழ்வதும் மழலைக் குழந்தைகளின் இயல்பு. கணங்கள் தோறும் பற்பல எண்ணற்ற முயற்சிகளில் ஈடுபட்டு உருளுவதும் புரளுவதும் கலைகள் பயில்வதும் விளையாடுவதும் மழலைக் குழந்தைகளின் அன்றாடக் கருமங்களாகும். மழலைகளின் ஆனந்தக் களிப்பில் அதன் சுழிப்புகளின் அவதானிப்பில் கவிஞர் யானைத் தாத்தா தேவன் பூதனார் அகமகிழ்ந்து வரைந்த வரிகளில் ‘சாதனா ஆடுறா’ என்ற மழலைகளுக்கான நூலை யாத்துள்ளார்.’(சோ.தேவராஜா, இயக்குநர், புத்தகப் பண்பாட்டுப் பேரவை). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 286ஆவது நூலாகவும் கலாலயம் பதிப்பகத்தின் 6ஆவது நூலாகவும் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்