17430 சிறுவர் பாடல் (கவிதைத் தொகுப்பு-1).

மயிலங்கூடல் த.கனகரத்தினம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 35.00, அளவு: 22×13 சமீ.

பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம் எழுதிய 25 சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல் இது. எங்கள் நாடு-தாய்நாடு, எங்கள் தெய்வம், தட்டு தட்டு, மரம் நாட்டுவோம், சுத்தம் சுகம் தரும், சூழல் மாசுபடுமோ, எங்கள் நல்ல வீடு, கடற்கரையில், கடலே கடலே, ஆனை வந்தது, முயலும் வந்தது, வீடு காக்கும் வீரன், தேயிலை தரும் தேனீர், உழைப்பு, மகாவலி கங்கை, காக்கையார் கூட்டிலே குயில் முட்டை, ஓடி வாரீர் தோழரே, தாய்ப்பால் மகிமை, அடுப்பு நெருப்பில் கவனம், பப்பி பப்பி, சல் சல் வண்டி, வீதி ஒழுங்கு, நீச்சல் பழகு, உண்மை நட்பு ஆகிய தலைப்புகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. மயிலங்கூடல் த.கனகரத்தினம், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூற் பகுதி எழுத்தாளராகவும் பிரதான பதிப்பாசிரியராகவும், தலைவராகவும் நீண்ட காலம் கடமையாற்றியவர். ஜாதகக் கதைகள், தாய்லாந்து சிறுவர்களின் நாட்டார் கதைகள் என்பன இவரது முக்கியமான சிறுவர் நூல்களாகும். இந்நூல் தலைப்பில் பின்னாளில் குமரன் புத்தக இல்லத்தின் வாயிலாக 2010இல் 16 பக்கங்களில் இலக்கியன் வெளியீடாக இந்நூலிலுள்ள 15 பாடல்களைத் தேர்ந்து மற்றொரு நூலும் வெளிவந்திருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18039).

ஏனைய பதிவுகள்

Better Online slots

Content What are Las vegas Best Silver Fish Gambling enterprise Unexpected situations Simple tips to Enjoy Fireball Slot machine game On line Free Harbors Frequently asked