17431 செல்லக் கண்ணே கேள்: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம்;. மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி). 

iv, 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5849-26-0.

கேணிப்பித்தன் ச.அருளானந்தம் திருக்கோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்தவர்;. 50 வருட காலத்திற்கும் மேலாக எழுத்துத்துறையில் இயங்கி வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள இவர் சிறுவர் இலக்கியத்துறையில் மட்டும் முப்பதுக்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளவர். இந்நூலில் கேணிப்பித்தனின் 32 சிறுவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கோணேசர் திருநடனம், மலர்களில் பனித்துளி, வற்றிய குளத்தில் மீன், செல்லக் கண்ணே கேள், பொங்குவோம் வா, தெரிந்துகொள்வோம், தேரேறி காளியாடி, விடிகாலைப் பொழுது, இயக்கம் தொடக்கம், வானில் தங்கத் தட்டு, மரத்திலே வீடு, வண்ணத்துப் பூச்சி, நிறுத்தியதா?, பட்டம் கட்டுவோம், வாறார் வன்னியனார், பலசாலி, கறையான், நமது பூமி, தாவரம், ஏன் ஏன்?, உலக நியதி, அதிசயமே, உறங்கும் முறை, நவராத்திரி, பட்டம் விடுவோம், புகழ் பாடுவோம், வளியின் வலிமை, வெப்பத்தின் செயல், காடு, தபால்காரர், முருகா கேக்கலையோ?, கருக்கட்டல் ஆகிய தலைப்புகளில் கேணிப்பித்தனால் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. கவிச்சுவையுடன், இளையோருக்கு சமூக விஞ்ஞான அறிவினைப் புகட்டும் நோக்கிலும் சில பாடல்கள் இயற்றப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 116520).

ஏனைய பதிவுகள்

Greatest Mathematical Gambling Actions

Articles Put Gambling | hop over to here Remove Parlay Wagers Parlay Gambling Guide Understanding Hooks In the Part Give Gaming Possibilities to have successful