அ.பௌநந்தி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-62-8.
நூலாசிரியர் அமிர்தலிங்கம் பௌநந்தி தமிழில் இளமாணி சிறப்புப் பட்டமும் முதுதத்துவமாணிப் பட்டமும் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழக கல்விப்பீட விரிவுரையாளராகக் கடமையாற்றும் இவர், பழந்தமிழ் இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டிவருபவர். சிறுவர் இலக்கியத்தில் இவருக்குக் காணப்பட்ட தனிப்பட்ட பெருவிருப்புக் காரணமாக சிறுவர் பாடல்கள், சிறுவர் பாடலாசிரியர்கள் பற்றிய கட்டுரைகள் பலவற்றை இவர் ஏற்கெனவே எழுதியுள்ளார். இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஓசை நயத்துடன் சிறுவர்கள் அபிநயித்துப் பாடக்கூடிய வகையில் இனிமையான பாடல்களாக ஆக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மூன்று பருவங்களாக வகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் 30 பாடல்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 243ஆவது நூலாக வெளிவந்துள்ளது.