யானைத் தாத்தா தேவன் பூதனார் (இயற்பெயர்: சோ.தேவராஜா). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, ஆடி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
12 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 15×21 சமீ., ISBN: 978-955-0958-06-1.
இந்நூலில் மல்லாகம், அரங்கப் பண்பாட்டுப் பேரவையின் இசைப்பா அரங்கு-01 இல் நிகழ்த்தப்படும் பாடல்கள்-10 உள்ளடக்கப்பட்டுள்ளன. ‘இப்பாடல் வரிகளை எழுதுவதில் ஈடுபட்ட யானைத்தாத்தா தேவன் பூதனார், இப்பாடல்களைப் பாடிய இளையோர் பேரவையின் பாடகர் குழு உறுப்பினர்கள் கு.புஷ்பகஜன், அ.அபிக்ஷா, ச.லினிஸ்கா, அ.சாதனா, சு.கிர்த்திகன், இசையாக்கத்தில் பங்காற்றிய ம.ஆனந்த், பாடல்களை ஒலிப்பதிவு செய்த ப.கருணாகரன், ஒலிப்பதிவிலும் பாடல் கலவையிலும் தேர்ச்சியிலும் பங்காற்றிய ஜொனி அந்தோனி ஜஸ்டின், புகைப்படக் கலைஞர் அனுஜன் ஆகிய அனைவருடனும் எமது அன்பைப் பகிர்ந்துகொள்கிறோம்.’ (சோ.தேவராஜா, இயக்குநர், புத்தகப் பண்பாட்டுப் பேரவை). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 285ஆவது நூலாகவும் கலாலயம் பதிப்பகத்தின் 5ஆவது நூலாகவும் வெளிவந்துள்ளது.