17438 கூடித் துயர் வெல்: சிறுவர் நாடகங்கள்.

யோ.யோண்சன் ராஜ்குமார். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

94 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-0958-36-8.

இந்நூல் கூடித் துயர் வெல், படிப்பு, கிளிக்கூண்டு ஆகிய மூன்று சிறுவர் நாடகங்களை உள்ளடக்குகின்றது. படிப்பு, கிளிக்கூண்டு ஆகிய இரு நாடகங்களும் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மட ஆரம்பப் பிரிவு சிறுவர்களுக்காக எழுதப்பட்டவை. கூடித்துயர் வெல் என்ற நாடகம், சிறுவர்களுக்காக பெரியவர்கள் நடிப்பதற்கென எழுதப்பட்டு திருமறைக் கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்டு இடம்பெயர்வுக் காலங்களில் பல முகாம்களிலும் பாடசாலைகளிலும் சிறார்களை ஆற்றுப்படுத்தும் நோக்குடன் மேடையேற்றப்பட்டது. யோண்சன் ராஜ்குமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அரங்கியல்துறையில் ஈடுபட்டு வருபவர். நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியரான இவர், இப்பாட ஆலோசகராகவும் கல்வித் திணைக்களத்தில் பணியாற்றி வருபவர். திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநரான இவர் பல நாடக எழுத்துருக்களை எமக்கு வழங்கிவந்துள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 314ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Las vegas Odds Evaluation

Blogs Biggest Group Champ Opportunity: City Opportunity | login 12bet Whats The essential difference between Bet And money Fee? In regards to our Vip Games