17440 வெந்து தணிந்தது.

மார்க்கண்டன் ரூபவதனன். யாழ்ப்பாணம்: ஞானமார்க்கம் அறமுதல், மதிபதி, மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, 2023. (பதுளை: அவிஸ்கா பிரின்டர்ஸ்).

xxviii, 60 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×15சமீ., ISBN: 978-624-98159-0-2.

‘ரூபவதனனும் அவரது வெந்து தணிந்தது நாடகப் பிரதியும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சி.மௌனகுரு அவரிகளின் முன்னுரையுடனும், ‘நான் பார்த்து இரசித்த ரூபவதனனின் நாடகம்’ என்ற தலைப்பில்  பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் இரா.மகேஸ்வரனின் வாழ்த்துரையுடனும் வெளிவந்துள்ள இந்நூலில் வெந்து தணிந்தது என்ற சிறுவர் நாடகப் பிரதியும், ஆற்றுகையாளர்களின் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையே பலம்-ஒற்றுமையைச் சிதைக்க வருவோரை நாம் புத்திசாலித்தனமாக இனம்கண்டுகொள்ள வேண்டும் என்னும் கருத்தை இன்னொரு வகையில் சிறுவர்களுக்குகந்த வகையில் ஆடல் பாடலுக்கூடாக இந்நாடகத்தில் மா.ரூபவதனன் உணர்த்துகின்றார்.

ஏனைய பதிவுகள்