17442 அம்மா சொன்ன கதைகள். 

தமிழவேள்.(இயற்பெயர்: க.இ.க.கந்தசாமி). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 1993. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ், 213, கிராண்ட்பாஸ் வீதி).

44 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 20.5×14 சமீ.

தமிழவேள் க.இ.க.கந்தசாமி அவர்களின் கைவண்ணத்தில் உருவான இச்சிறுவர் இலக்கியம் பண்டைய புலவர்களினதும் முனிவர்களினதும் வாழ்வின் சில வரலாற்றுச் சம்பவங்களை கதைகளாகச் சொல்கின்றது. இந்நூலில்  கடலைப் பருகிய முனிவர், பூதத்தை வென்ற புலவர், அண்ணனுக்காக அரசு துறந்த தம்பி, போரைத் தடுத்த புலவர், நரை திரை இன்றி வாழ்ந்த புலவர், சுட்ட பழமும் சுடாத பழமும், இறைவனைப் பணிகொண்ட புலவர், கம்பங்கொல்லை காத்த புலவர், வெட்டப்பெற்ற உடல்களை உயிர்பெறச் செய்த புலவர், ஆசுகவியாற் புகழ்பெற்ற புலவர், இரட்டைப் புலவர்கள், புதிய பாடல்களைப் பழைய பாடல்களாக ஆக்கிய புலவர் ஆகிய தலைப்புகளில் இயற்றப்பட்ட கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் 21ஆவது வெளியீடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 115720. நூலகம் நிறுவன இணையத்தள நூலக சேர்க்கை இலக்கம் 102963).

ஏனைய பதிவுகள்

14127 சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் தெய்வீகப் பாமாலை: 20ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-1995.

க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பன் இல்லம், இல. 69, வான்றோயன் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 14: