17445 இயற்கை: சிறுவர் கதைகள்.

எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-77-1.

இந்நூலில் முயலும் குழிமுயலும், குரங்கின் பேராசை, ஆட்டுக்குட்டியின் ஆசை, நரியும் ஆட்டுக்குட்டிகளும், காட்டில் சில மணிகள், ஒற்றுமையே பலம், கடல் இராச்சியம், ஊரியும் சங்கும், சூரியக் குடும்பம், தாத்தாவும் வண்ணத்துப் பூச்சியும், வித்துக்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 11 சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன. தனது பாடசாலை வாழ்க்கைக் காலத்திலேயே எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவர் புலோலி தெற்கை பிறப்பிமாகக் கொண்ட பஞ்சகல்யாணி. இயற்கையை நேசிக்கும் இவர் இயற்கையுடனான தனது ஈடாட்டங்களையும் அனுபவங்களையும் பாடல்கள், கவிதைகள், கதைகள் நாடகங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திவருகின்றார். இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு சிறுவர்களை நன்னடத்தையுள்ளவர்களாக்கும் என இவர் நம்புகின்றார். இந்நூலில் ஆங்காங்கே அதனை காணமுடிகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 354ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72248).

ஏனைய பதிவுகள்

14498 தண்ணுமைத் தண்ணொலி.

நாகரட்ணம் மாதவன். யாழ்ப்பாணம்: கலாவித்தகர் நாகரட்ணம் மாதவன், சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: S.T.G. பிரிண்டர்ஸ், தாவடி). xviiiஇ, (2), 119 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 25×18 சமீ.