சதீரா நஸீர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, நவம்பர் 2018, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).
(4), 50 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 125., அளவு: 21×14.5 சமீ.
பள்ளி மாணவியாக இருந்தவேளையில் செல்வி சதீரா நஸீர் எழுதிய மூன்று சிறுவர் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. காலம் மாறியது, பேய் பங்களா, தனக்கு வந்தால் தெரியும் ஆகிய மூன்று கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.