17447 சிறுவர்களுக்கான சின்னக் கதைகள்.

எஸ்.எஸ்.எம்.றபீக். கொழும்பு 10: மாணவர் வெளியீட்டகம், மருதானை, 1வது பதிப்பு, 2018. (கண்டி: Student Publication, 225, Dawlagala, Handassa).

 (2), iv, 46 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-3990-69-3.

இந்நூலில் 14 கதைகள் உள்ளன. ஆசிரியரின் மொழிநடை இயல்பான உரையாடல் போன்று அமைவதுடன் பாத்திரங்களும் இலகுவாக மனதில் ஊடுருவி விடுகின்றன. கதைகளின் கருக்கள் வலிந்து திணிக்கப்படாது உணர்வுரீதியில் அறிவினுள் பதியும் வண்ணம் அமைந்திருக்கின்றன. மனித மனங்களிலிருந்து மறைந்துபோன சில மகத்தான மாண்புகளை பறவைகள், மிருகங்கள் சிலவற்றைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு கதைகளாக்கியுள்ளார். வண்ணத்துப் பூச்சியின் முதல்நாள் அனுபவம், அவசரம் ஆகாது, இயன்றதைச் செய்தல் நன்று, காகமும் குயிலும், காகமும் வடையும், மாட்டிக்கொள்ளாத குருவி, நாணலும் மீனும், பிள்ளை சிறியது பாடம் பெரியது, பூவும் தேனியும், புஷ்பா தேடிய அடையாளம், தப்பிக்கொண்டது முயல், தீர்ப்பதற்கு வழியே இல்லை, திருந்திய நரி, துரோகம் செய்ய வேண்டாம் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்