இந்திராணி புஷ்பராஜா. மட்டக்களப்பு: திருமதி இந்திராணி புஷ்பராஜா, இல.6, திருமகள் வீதி கிழக்கு, கல்லடி, உப்பொடை, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 81, முனை வீதி).
(8), 22 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 325., அளவு: 28×20.5 சமீ., ISBN: 978-955-71285–0-4.
ஓய்வுநிலை பாடசாலை அதிபரும், மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சாரதா முன்பள்ளி அதிபருமான திருமதி இந்திராணி புஷ்பராஜா அவர்களின் சிறுவர்களுக்கான கதைத் தொகுதி. ஆறு முதல் பன்னிரண்டு வயதுவரையிலான பிள்ளைகளின் வாசிப்பு விருத்திக்கேற்ற வகையில் கவர்ச்சிகரமான வண்ணப்படங்களுடன் இக்கதைகள் அச்சிடப்பட்டுள்ளன. தரணி போற்றக் காரியமாற்று என்ற தலைப்பிலான சிறுவர் பாடலுடன் தொடங்கும் இந்நூலில், நல்ல நட்பு, பாசமலர், கீதாஞ்சலியும் நாய்க்குட்டியும், ஏழையை வாழவைப்போம், அகிம்சைவழி அற்புதமானது, உண்மை உயர்வுதரும் ஆகிய ஆறு கதைகள் இடம்பெற்றுள்ளன.