சிட்னி மாகஸ் டயஸ் (தொகுப்பாசிரியர்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (கணேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52, A/1, கலஹிடியாவ).
vi, 7-80 பக்கம், சித்திரம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1848-68-2.
கலாநிதி டியூடர் வீரசிங்க, அலெக்ஸ் பெரேரா ஆகியொரின் அறிமுகவுரைகளுடன், சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுப்பில், அறிவு பெறும் அரசன், நல்ல யுகமும் கலியுகமும், தங்கப் பழம், மக்கள் சேவைக்கான திட்டம், அரசனின் வியர்வை, மகிழ்ச்சியற்ற நகரம், கசப்பு ஆலம் தளிர், அரசர்களோடு பழகும் முறை, ஆக்கிரமிப்புக்கு முன்பு, உயர்ந்த யாகம், உதவியால் கிடைத்த சமாதானம், அபூர்வ ஆடை, துன்புறுத்தலுக்கான முற்றுப்புள்ளி, அரசனின் சொர்க்கலோகப் பயணம், அரசனின் அபிமானம், மக்கள் விருப்பம், சங்கீதக் கலைஞனை வரவேற்றல், ஞானம் நிறைந்தவன், அரசனின் மணி, அரசனின் நல்லாட்சிச் சிந்தனை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 20 கதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் நல்லாட்சிக்கான கட்டியக் காரணியான ஞானம் மைய எண்ணக்கருவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதைத் தவிர, ஆட்சியாளர்களின் பற்றற்ற தன்மை, சந்தர்ப்ப ஞானம், எளிமை, நுண்ணறிவு, உண்மை, நேர்மை, நியாயம் ஆகியனவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 78603).