செல்லையா யோகராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 225., அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-1997-99-1.
இந்நூலில் மார்க்சிய நோக்குடைய முக்கியமான புனைகதை ஆசிரியரான செ.கணேசலிங்கனின் ‘நிலக்கரியும் சிறுவனும்”, மார்க்சிய நோக்கில் இலக்கியம் படைக்கும் மற்றொரு படைப்பாளியான செ.யோகநாதனின் ‘தங்கத் தாமரை’, சிறுவர் இலக்கியத்தில் அதிக நூல்களை வழங்கிய ஓ.கே.குணநாதனின் ‘புரிந்துணர்வு’, மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளரான பஞ்சாட்சர சர்மாவின் ‘எலிக்குஞ்சு செட்டியார்’, வானொலி மாமா என்று இளையோரால் போற்றப்படும் வ.இராசையாவின் ‘அம்மாவைத் தேடிய குஞ்சு’ ஆகிய சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 73704).