அ.வா.முஹ்ஸீன். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2023. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரெடர்ஸ்).
viii, 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-6135-21-8.
அ.வா.முஹ்ஸீன் திருக்கோணமலை மாவட்டத்தில் பாலையூற்று கிராமத்தைச் சேர்ந்தவர். வளரிளம் பருவத்தினருக்கு ஏற்ற இளையோர் நாவலாக இந்நூலை எழுதியுள்ளார். இந்நூலில் சிங்கள, ஆங்கில மொழிச் சொற்களையும் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். சிங்களச் சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை அச்சொற்களுக்கு அருகிலும், ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை நூலின் இறுதியிலும் தந்துள்ளார். கன்சுலின் கவலை, கன்சுலின் குடும்பம், கன்சுலின் ஆசிரியர்கள், கன்சுலின் நண்பர்கள், கன்சுல் வழிகாட்டுகிறான், கன்சுலைக் காணவில்லை, காவல்துறையினரின் நடவடிக்கைகள், கன்சுலுக்கு நடந்தது என்ன?, புதிய இடத்தில் கன்சுல், கன்சுலும் காமினியும், ஓர் இயற்கை அனர்த்தம், கன்சுலின் புதிய நண்பன், கன்சுலின் தங்கை, கன்சுலின் சாதுரியம், கன்சுலின் பிரியாவிடை ஆகிய 15 அத்தியாயங்களில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119615).