ஆர்த்திகா குமரேஷ், மந்தாகினி குமரேஷ். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், முதற் பதிப்பு, பெப்ரவரி 2024. (சென்னை 600093: வேரல் புக்ஸ்).
40 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: கனேடியன் டொலர் 9.00, அளவு: 20.5×20.5 சமீ., ISBN: 978-81-967929-8-5.
தனது உடமையென்று வைத்திருந்து அதனை இழந்துவிடும் வன்மையானவர்களால், கொடுத்து உதவும் இன்பத்தை அறியமுடியாது போகும் என்ற கருத்தினை வள்ளுவரின் வாய்மொழி ‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (ஈகை, 228)’ என்ற குறள்வெண்பா வழியாக உலகுக்குக் கூறுகின்றது. இக்கருத்தினை முன்வைத்து இளஞ்சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட கதை இது. தமிழிலும் ஆங்கிலத்திலும் சமாந்தரமாக வண்ணப்பட உதவியுடன் செல்லப் பிராணிகளான இரண்டு நாய்க்குட்டிகளின் மூலம் இக்கதை சொல்லப்படுகின்றது. கவிஞரும், ஆக்க இலக்கியவாதியுமாகிய மந்தாகினி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். இந்நூல் அவரும் அவரது மகளும் இணைந்து எழுதியதாகும்.