ஜோ.ஜுலியானா (கதை), ஜே.ஆதித்யா (ஓவியங்கள்). கொழும்பு: Let’s Read Asia, values for all Book Lab, Asia Foundation 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 12: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி, 20, சென். செபஸ்தியன் ஹில்).
12 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×21.5 சமீ., ISBN: 978-624-5791-07-1.
Asia Foundation நிறுவனம், Let’s Read Asia, values for all Book Lab ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்ட சிறுவர் நூல் தயாரிப்பு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக சிறுவர்களுக்கான இந்நூல் பிரசுரமாகியுள்ளது. சமாதானம், மரியாதை, பொறுமை காத்தல், இணங்கிப் போதல், அன்பு, நேர்மை போன்ற தனி மனித குணாம்சங்களை சிறுவர்களிடையே அறிமுகப்படுத்தும் நோக்குடன் இந்நூல் வெளியீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் இளையோரின் பங்களிப்பு இன்றி இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமையானது, இந்தத் திட்டத்தின் பெரும் தோல்வியாக உள்ளதை இச்சிறுவர் நூல்களின் எழுத்துப்பிழைகளுடன் கூடிய தமிழ்ப் பதிப்புகளின் வாயிலாக உணரமுடிகின்றது.