ரூபராணி ஜோசப். கண்டி: குறிஞ்சித் தேனி பதிப்பகம், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், 18/13 பூரணாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கண்டி: சண் பிரிண்டர்ஸ், 67, மாபனாவதுர).
(6), 7-46 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.
கலாபூஷணம் ரூபராணி அவர்கள் ‘விஜய்’ சிறுவர் சஞ்சிகையில் தொடர்ந்து எழுதிவந்த சிறுவர்களுக்கான அறிவியல் தகவல்களைத் தொகுத்து அம்மாவின் ஆலோசனைகள் என்ற இவ்விலக்கியத்தை படைத்துள்ளார். அதிகரித்த மனிதச் செயற்பாடுகளால் நாளாந்தம் நலிவடையும் இயற்கை வளங்களைக் கருப்பொருளாகக் கொண்ட கதைகள் இவை. நம்மைச் சுற்றி இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அவற்றை அறிவது ஆரோக்கியமானது, மனித வாழ்க்கைக்கு இவை எவ்வளவு முக்கியமானது என்பதை மறந்துவிடுகின்றோம். நாம் அற்பமானவை என்று எண்ணுவன எவ்வளவு பயனுள்ளவை, உபயோகமானவை என்பதை அம்மாவின் ஆலோசனைகள் மூலம் விளக்க முற்பட்டுள்ளார். இந்நூலில் சூரியன் வராவிட்டால், கத்தியும் புத்தியும், முயற்சித்தால் உண்டு நன்மை, தென்னையும் நன்றியும், பூட்டும் திறப்பும், மழை வேண்டாமா?, நா காப்போம், கடிகாரம் காட்டுவதென்ன?, ஊசியும் நூலும், கொடுத்தால் இன்பம், நான் தான் பெரியவன், தண்ணீர் தண்ணீர், காயா பழமா?, ஐயோ நெருப்பு, காற்றே நீ வீசாயோ?, முதுமைக்கு மரியாதை, வாசிப்போமா?, உப்பு தப்பல்ல, சண்டையா சமாதானமா? ஆகிய 19 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 88971).