17462 இளைஞர் இலக்கியம்: உலகை மாற்றிய நவீன சிந்தனைகள்.

சபா. ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு 2017. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48இ Gaswork Street). 

vi, 34 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 18,0., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-1857-50-9.

இளைஞர் இலக்கியம், இளம் வளர்ந்தோருக்கான இலக்கியம், விடலைப் பருவத்தினருக்கான இலக்கியம், கட்டிளைஞருக்குரிய இலக்கியம் என்ற சொல்லாடல்கள் ஏறத்தாள ஒரு பொருள் குறித்து நிற்கின்றன. இப்பிரிவினருக்குரிய எழுத்தாக்கங்கள் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பொழுதுபோக்கு நிலையிலும் முக்கியமானவை. ஊறுபடாத சிந்தனைகளை அவர்களிடத்து வளர்ப்பதன் வாயிலாக வளமான சமூகத்தை உருவாக்க முடியும். அந்நிலையில் நேர்ப் பண்பு மிக்க எழுத்தாக்கங்களையும் கலையாக்கங்களையும் முன்னெடுக்கவேண்டியுள்ளது. இந்நூலில் இளைஞர் இலக்கியப் பண்புடன் எழுதப்பட்ட பன்னிரு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மார்க்சிசம், மனித உரிமைகள் பிரகடனம், படிமலர்ச்சிக் கோட்பாடு, நனவிலி உள்ளம், சார்புக் கோட்பாடு, புவியீர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள், அறிவும் அதிகாரமும், மரபணுப் பொறியியல், ஆர்தர் சி.கிளார்க்கின் கற்பனைகள், இணையம், மனவெழுச்சி நுண்மதி ஆகிய தலைப்புகளில் இவ்வாக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் PAM 6290).

ஏனைய பதிவுகள்

16959 கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் : ஒரு வரலாற்றுப் பதிகை.

இளையதம்பி பாலசுந்தரம். கனடா: சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, 2017. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough, Toronto). 517 பக்கம், விலை: கனேடிய