17463 இனிக்கும் தமிழ்: கட்டுரைக் களஞ்சியம்.

வடகோவை பூ.க.இராசரத்தினம் (இயற்பெயர்: கந்தப்பு இராசரத்தினம்). கொழும்பு 6: வடகோவை பூ.க.இராசரத்தினம், 36/2A, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2023. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

144 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×15  சமீ.

’கல்வி தொடர்பான அறிவை விருத்திசெய்யும் நோக்கில் ஏற்கனவே ‘வாசிப்பும் தேடலும்’ என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளேன். அதன் தொடர்ச்சியாக தற்போது ‘இனிக்கும் தமிழ்’ என்ற கட்டுரைக் களஞ்சியம் வெளிவருகின்றது. இதில் கல்வி பற்றி அறியவும், இலக்கியம், இலக்கணம், மொழி, வாழ்க்கை, பாரதி, இரவீந்திரநாத் தாகூர் போன்ற கவிஞர்கள் பற்றிய தேடல், முத்தமிழ், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, விஞ்ஞானமும் இலக்கியமும் ஒப்பீடு, மேற்கத்தைய மேற்கோள்கள், பண்பாடு, பழமொழிகள் போன்ற விடயப் பரப்புகளை உள்ளடக்கி உள்ளேன். கல்வி உலகில் புதிய செயல்நெறிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. மாணவர்கள் தமது உள்ளார்ந்த ஆற்றல்களை உள்ளுரத் தெரிந்துகொண்டு முழுமையான உணர்ச்சியை எய்துவதற்குரிய நிலையை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் அறிவாற்றலையும் அறிவுணர்வையும் உணர்த்துவதே கல்வியின் நோக்கமாக அமைய வேண்டும். இக்கருத்தை அடிப்படையாக வைத்து எமது கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன.” (முன்னுரையில் ஆசிரியர்). கல்விப்புலத்தில் செயற்பட்டு வந்த, ஓய்வுபெற்ற அதிபர் அமரர் வடகோவை பூ.க.இராசரத்தினம் (07.01.1931-11.06.2022) அவர்களின் மறைவின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இந்நூல் அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14063 கடவுள் ; வழிபாடும் தமிழ் மக்களும்.

ஆ.விஸ்வலிங்கம். கொழும்பு: டாக்டர் ஆ.விஸ்வலிங்கம், 26, உவார்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 1975. (சென்னை-01: Hoe and Co.,The Premier Press).. 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. அறமே

15197 இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: வழிகாட்டி நூல்.

இரா. ரமேஷ்;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx, 210 பக்கம், விலை: