சோபா (ஆசிரியர்). லண்டன் நு13 0துஓ: முல்லை அமுதன், 34, Redriffe Road, Plaistow 1வது பதிப்பு, கார்த்திகை 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
94 பக்கம், சித்திரங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண் 4.00, அளவு: 28×22 சமீ.
இருபது வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது அச்சிதழாகவும், தொடர்ச்சியாக மாதா மாதம் மின்னிதழாகவும் ஈழத்துப் படைப்பாளியான முல்லை அமுதனால் (இரத்தினசபாபதி மகேந்திரன்) வெளியிடப்படும் ‘காற்றுவெளி-கலை இலக்கிய இதழின்’ இங்கிலாந்து சிறப்பிதழாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதில் நிவேதா உதயராஜன், இரா. உதயணன், மாதுமை சிவசுப்பிரமணியம், பவானி ஆழ்வாப்பிள்ளை, இளைய அப்துல்லாஹ், நவஜோதி ஜோகரட்ணம், தமிழரசி ஜெயதாசன், எம்.ரி.செல்வராஜா, இராஜேஸ் பாலா, கோவிலூர் செல்வராஜன், பொன்.இரத்தினபாலன், மோகன், தவமணி மனோகரன் ஆகியோர் எழுதிய 13 சிறுகதைகளுடன், புங்கை ரூபன், மலர்விழி அன்பு சார்ள்ஸ், காரை. செ.சுந்தரம்பிள்ளை, சு.திருப்பரங்குன்றன், திருமதி குணாளினி தயானந்தன், வட்டூர் அ.கு.ரமேஷ், தமிழ்மகள் பரா, கோபன் மகாதேவா, சாந்தினி சந்திரன், ஜெயா ஸ்ரீ, த.சு.மணியம், ராதா மரியரத்தினம், இளவாலை அமுது, கலா புவன், அருள்நிலா வாசன், புலவர் சிவநாதன், பூங்கோதை ஸ்ரீ, கவிஞர் பாலரவி, கர்ணன் சின்னத்தம்பி, புனிதா கணேஷ் ஆகியோர் படைத்த 20 கவிதைகளும், வி.இ.குகநாதன் (சங்ககால ஒளவை போர்த்தூதில் மேற்கொண்ட வியத்தகு நுட்பம்), அரங்க முருகையன் (சிலப்பதிகாரம்-சிலம்பு பற்றிய காப்பியம்), நுணாவிலூர் கா.விசயரத்தினம் (மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரின் இடைச்சங்ககாலப் பாடல்கள்) ஆகியோர் எழுதிய 3 கட்டுரைகளும், மதுரன் தமிழவேள் (மொழியின் அதீதம்-சில்வியா ப்ளாத் கவிதை மொழிபெயர்ப்பும் ஒரு சிறு குறிப்பும்), சித்தி கருணானந்தராஜா (அஷ்வகோசரின் புத்தசரிதம்) ஆகியோர் மொழிபெயர்த்த 2 ஆக்கங்களும் இங்கிலாந்து சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.