க.க.உதயகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
செப்டெம்பர் 2015இல் 18,19,20ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட சிறப்புமலர் இதுவாகும். வள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் தமிழறிஞர்களால் எழுதப்பட்ட 13 ஆக்கங்கள்; இம்மலரில் தொகுக்கப்பெற்றுள்ளன. நா.தங்கவேலன் (திருவள்ளுவர் காலம்), க.குகதாசன் (திருக்குறளில் நவரசங்கள்), அ.ச.அப்துல் சமது (பொது மறை), த.சபாரத்தினம் (தேடக் கிடைக்காத செல்வம்), சி.சிவபாக்கியம் (வள்ளுவர் கண்ட பெண்மை), சோ.பரமசாமி (திருக்குறளும் கீதையும்), சேவியர் எஸ்.தனிநாயக அடிகள் (வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயலும்), எஸ்.இராமகிருஷ்ணன் (திருக்குறள்-சமுதாயப் பார்வை), வ.உ.சிதம்பரப்பிள்ளை (திருவள்ளுவர் திருக்குறள்: பாயிர ஆராய்ச்சி), வீ.அரசு (திருக்குறளும் தமிழ் சமூகமும்), ஆகிய தமிழறிஞர்களின் கட்டுரைகளும் திருக்குறள் தொடர்பான சில சுவையான தகவல்களும், திருக்குறள் மொழிபெயர்ப்புகளின் பட்டியலும், திருக்குறள் பதிப்புகளின் பட்டியலும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 96658).