ஆசிரியர் குழு (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1960. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை).
(36), 180 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
அமரர் க.வயிரமுத்து பொதுச்செயலாளராகச் சேவையாற்றிய காலத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் முதன்முறையாக வெளியிடப்பெற்ற ஆண்டு மலர் இது. இம்மலரின் உருவாக்கத்தில் பணியாற்றிய ஆசிரியர் குழுவில் திருவாளர்கள் கா.பொ.இரத்தினம், மு.கணபதிப்பிள்ளை, ச.சரவணமுத்து, சி.த.சிவநாயகம், ஆ.தேவராசன், நா.ப.பாலசந்திரன், வ.யேசுரத்தினம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இம்மலரில் பரமகம்சதாசன் (பொலிக முருகு), கா.பொ.இரத்தினம் (தமிழுணர்ச்சி), சி.கணபதிப்பிள்ளை (தெய்வப் புலவர் திருவள்ளுவர்), மா.இராசமாணிக்கனார் (சங்ககாலக் கல்வி நிலை), க.கணபதிப்பிள்ளை (துயரக்கேணி), தா.ஏ.ஞானமூர்த்தி (தேவரின் கற்பனைத் திறன்), சீனி வெங்கடசாமி (தமிழ் இலங்கை), செ.வேலாயுதபிள்ளை (விஞ்ஞானம் சமயத்துக்கு விரோதமானதா?), க.ந.வேலன் (ஆண்மையும் பெண்மையும்), ஒளவை துரைசாமிப்பிள்ளை (கவிதைகளின் அணியமைப்பு), க.பெருமாள் (வான் சிறப்பு), அ.கி.பரந்தாமனார் (திருக்குறளில் பொருளாதாரம்), கா.மீனாட்சிசுந்தரன் (இலக்கணத்தில் இலக்கியம்), மு.இராமலிங்கம் (வயல் வேலைகளோடு தொடர்புடைய பாடல்கள்), செல்வி சோ.பகீரதி (அறத்தொடு நிற்றல்), மு.ஆரோக்கியம் (வீரமாமுனிவர் மாண்பு), நீலாவணன் (தியாகம்), திருமதி தே.தியாகராசன் (மாதவி மனம்), மொ.அ.துரை அரங்கசாமி (பண்டைக்காலக் கல்வி முறை), பொ.கிருஷ்ணன் (தரு வளர்த்து உயிரோம்பித் தமிழ் காப்போம்), சொ.சிங்காரவேலனார் (பாரதியும் காதலும்), நா.பார்த்தசாரதி (எழுத்தாண்மை), செல்வி ஆர்.வனஜா (சோழ நாணயங்கள்), கே.எம்.வேங்கடராமையா (உடன்கட்டை ஏறல்), நா.சுப்பிரமணியம் (சிங்கள இலக்கியம்) ஆகியோர் இம்மலருக்கான ஆக்கங்களை வழங்கியுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62917).