க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
48 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 189ஆவது இதழாக 10.01.2023இல் வெளிவந்த லெட்சுமணன் முருகபூபதி அவர்களின் சிறப்பிதழில், படைப்பாளி முருகபூபதி ஓர் இலக்கிய ஆளுமை (கிறிஸ்டி நல்லரெத்தினம்), முருகபூபதி அவர்களின் ‘சுமையின் பங்காளிகள்’ (தாமரைச்செல்வி), முருகபூபதியின் ‘கங்கைமகளை’ நான் கண்டபோது (காரைக்கவி கந்தையா பத்மானந்தன்), லெ.முருகபூபதியின் கதைசொல்லும் திறனுக்குக் கட்டியம் கூறி நிற்கும் ‘கதைத் தொகுப்பின் கதை’ (ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம்), உறவுகளின் ஆத்மார்த்த உணர்வுகளைப் பேசும் ‘நினைவுக் கோலங்கள்” (கே.எம்.செல்வதாஸ்), லெ.முருகபூபதி: புகலிட இலக்கிய வாழ்வியல் சாதனையாளர்! எழுத்தாளர் என்னும் அடையாளத்தின் முகவரியாளர்! (ஐங்கரன் விக்கினேஸ்வரா), கனவுகள் ஆயிரம்-சிறுகதை (முருகபூபதி) லெ.முருகபூபதியின் ‘நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்’ ஒரு பார்வை (மாவனல்லை ருஸ்னா நவாஸ்), அக உணர்வின் சொல் ஓவியமாய்: முருகபூபதியின் ‘சமாந்தரங்கள்’ சிறுகதைகள் (சிவ.ஆரூரன்), எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர், முருகபூபதிக்கு எழுதிய கடிதம், அறிமுக நோக்கில் ‘இலங்கையில் பாரதி’ (செ.யொகராசா), முருகபூபதியின் ‘சொல்ல வேண்டிய கதைகள்” குறித்த ஒரு வாசக நிலை நோக்கு (புலோலியூர் வேல் நந்தகுமார்), முருகபூபதியின் ‘சமதர்ம பூங்காவில்’ (அஷ்வினி வையந்தி), தேசிய சாஹித்திய விருது பெற்ற முருகபூபதியின் ‘பறவைகள்’ நாவல் (சிதம்பரப்பிள்ளை சிவக்குமார்), எழுத்தாளர் முருகபூபதியின் ‘பாட்டி சொன்ன கதைகள்’ (வ.ந.கிரிதரன்), வாழ்வியல் அர்த்தம் தேடும் ‘இலக்கிய மடல்’ (த.கலாமணி), கலை மலிந்த ‘கடிதங்கள்’ (மகேந்திரராஜா பிரவீணன்), போரினது தாக்கம் வெளிப்படும் கதைகள் ‘வெளிச்சம்’ (புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்) ஆகிய படைப்பாக்கங்கள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.